போனிக்கபூரின் மகன் அர்ஜூன்கபூர் இந்தியில் கோமாளியாகிறார்!

Published:

komaali - 2026

ஜெயம்ரவி நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கோமாளி. காஜல் அகர்வால், யோகி பாபு உடன் நடித்திருந்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். பிரதீப் இயக்கி இருந்தார்.

poonikapur - 2026

இந்தப் படத்தின் இந்தி உள்ளிட்ட பிறமொழி ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கி உள்ளார்.
தற்போது இந்தியில் மைதான் படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இரு தமிழ் படங்களை தயாரிக்க உள்ளார்.

கோமாளி இந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அத்தோடு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறாராம் போனிகபூர்.

Related articles

Recent articles

spot_img