சிண்ட்ரல்லா படம்! சாக்ஷிக்கு ஒப்பனையே வேண்டாம் கேரக்டரே அதுதான்! நெட்டிசன்ஸ்!

சினி நியூஸ் சினிமா
sakshi akar - 2026

மாடல் மற்றும் டிவி தொகுப்பாளினியான சாக்ஷி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அவர் செய்த பல விஷமத்தனங்களால் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர்.

அதோடு சாக்ஷியை சினேக்ஷி, விஷம், பாய்சன் என்றும் பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். மேலும் பாம்பு படங்களை போட்டும் அவரை கிண்டல் செய்தனர்.

Sakshi Agarwal 1 - 2026

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ஆர்யா, சாயிஷா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்து வரும் டெடி படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சிண்ட்ரெல்லா படத்திலும் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா படத்தில் அவர் நடிக்கயுள்ள கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சாக்ஷி அகர்வால் வில்லி ரோலில் நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படத்தில் பரபரப்பை கூட்டும் காட்சியாக இருக்கும் என தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சாக்ஷி அகர்வால் சண்டை மூட்டிவிடுவது, ஒட்டுக்கேட்பது, போட்டுக்கொடுப்பது என இருந்து வந்தார். இதனால் அவரை வில்லிப்போல் பார்த்தனர் நெட்டிசன்கள், அவர் வில்லி ரோலில் நடித்திருப்பதை கேட்டு சரியான ரோல்தான் என தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.