இது எல்லாத்துக்கும் மேல படம் மூலம் நாயகனாகும் கோபிநாத்!

சினி நியூஸ் சினிமா
kopinath - 2026

சின்னத்திரை விஜய்டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சந்தானம் சினிமாவில் காமெடியனாகி பின்னர் ஹீரோவாகிவிட்டார்.

அதன்பிறகு தனுஷ் நடித்த 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இப்போது முன்னணி ஹீரோவாகி விட்டார்.

சந்தானம், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து இப்போது மாகாபா ஆனந்த், கவின், ரியோராஜ் போன்ற சீரியல் நடிகர்களும் சினிமாவில் ஹீரோவாகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத்தும், இது எல்லாத்துக்கும் மேல -என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை விஜய காந்த் நடித்த கண்ணுப்படப்போகுதய்யா படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்குகிறார். குழந்தை களை மையமாகக்கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் பல குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.