நடந்தது நிச்சயதார்த்தம் இல்லை அதற்கு முந்தைய சடங்குகள்: ராணாவின் தந்தை விளக்கம்!

Published:

51c80025d5aeb3b0775ff1c7c199f8cc - 2026

ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ராணா டகுபதிக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என அவருடைய தந்தை சுரேஷ் பாபு பேட்டியளித்துள்ளார்.

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.

இந்நிலையில் மிஹீகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்று வெளியிட்டார் ராணா டகுபதி. இதையடுத்து அவருக்கும் மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இதை மறுத்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் பாபு கூறியதாவது:

இன்று நடைபெற்றது நிச்சயதார்த்தம் அல்ல. திருமணத்துக்குப் பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இணைந்து இன்று விவாதித்தன. நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கும் திருமணத் தேதி குறிப்பதற்கும் முன்பு மணமக்களின் பெற்றோர்கள் சந்தித்துக் கொள்வது தெலுங்குக் குடும்பங்களின் வழக்கமாகும். அதுதான் இன்று நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img