
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் கமல்ஹாசனுக்காக ஒரு கேக்கை வாங்கியுள்ளார். அந்த கேக்கில் நம்மவர் என எழுதப்பட்டுள்ளது.மேலும், மையத்தின் கொடியும் அதில் ஏற்றப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பில் கமல் இன்று கலந்து கொள்கிறார்.எனவே, அப்போது வனிதா விஜயகுமார் இந்த கேக்கை அவருக்கு பரிசளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



