
ஹேராம் படத்தில் நடித்த சவுகார் ஜானகி, 14 வருட இடைவெளிக்கு பிறகு வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 400வது படம்.
இதுகுறித்து ஆர்.கண்ணன் கூறுகையில், ‘ சந்தானம் நடிக்கும் முழுநீள காமெடி படத்தை இயக்குகிறேன்.மசாலா பிக்ஸ் நிறுவனமும் எம் கே ஆர் பி புரொடக்ஷன் நிறுவனமும் தயாரிக்கின்றன. இப்படத்துக்கு வித்தைக்காரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சந்தானத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சவுகார் ஜானகியை அழைத்தபோது எனக்கு வயது ஆகி விட்டது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். கதையை கேளுங்குள் பிடித்து இருந்தால் நடியுங்கள் என்று சொல்லி பெங்களூருவில் வசிக்கும் சவுகார் ஜானகியை சந்தித்து கதை சொன்னோம்.அவருக்கு பிடித்துபோய் உடனே நடிக்க சம்மதித்தார்.
இதில் சவுகார் ஜானகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோகர் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் சவுகார் ஜானகியின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டோம். இந்த வயதிலும் வசனங்களை நன்றாக நினைவில் வைத்து பேசினார்.
தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சவுகார் ஜானகி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதே மாதிரியான நகைச்சுவை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சந்தானம், சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும்படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது’ என்றார்
#DirectorKannan admires Ace legendary actress #SowcarJanaki who is doing her 400th Film which is directed by Director Kannan himself.Stars actor #Santhanam & will be a full length comedy Film. 2020 February release
— glamoursathya05 (@glamoursathya05)
@masalapixweb @johnsoncinepro pic.twitter.com/BxHBgfr6j0