
பிகில் படத்துக்காக நடிகர் விஜய் ரசிகர்கள் வைத்த சிலை தாடி பாலாஜியின் உருவத்தில் இருப்பதாக சமூகத் தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
டிவிட்டரில் இது குறித்த படத்தைப் பகிர்ந்து கொண்டு சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அடேய்… பிகில் படத்துக்கு போயி எனக்கு எதுக்குடா சிலை வெச்சீங்க என்று தாடி பாலாஜி கேட்பது போலும், தனக்கு சிலை வெச்ச ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு தாடி பாலாஜி நன்றி தெரிவித்துக் கொண்டார் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில் படம் நேற்று வெளியானது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஹிந்தியில் டங்கல், லகான் போல் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப் படும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதே நேரம் அவை ஹீரோவை மையமாக வைத்து இல்லாமல் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை. ஆனால், லாஜிக், கதை அம்சம் என்று எதுவும் இல்லாமல் பிகில் படத்தைக் கோட்டை விட்டுவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிகில் படத்துக்கு எனக்கு ஏன்டா சிலை வச்சீங்க…
தனக்கு சிலை வைத்த ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் தாடி பாலாஜி ????



