February 21, 2026, 6:53 PM
29 C
Chennai

தீபாவளி வாழ்த்துக்கள்! முதல்வர்!

cm 1 - 2026

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை உலகமெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒன்று நாளை வர உள்ள தீபாவளி பண்டிகைக்கு துணை முதல்வரும், முதல்வரும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் நீங்கி ஒளி மிளிரும் தினமாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தீபாவளித்திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வளமான வாழ்விற்கு இறைவனை வழிபடுவர். உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி விருந்துண்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த தீபதிருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும் இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும் தித்திக்கும் இந்த தீபாவளியை மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட மனதார வாழ்த்தி அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என வாழ்த்து கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories