சுச்சிலீக்ஸ் மூலம் வைரலான பாடகி சுசித்திரா மீண்டும் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி உள்ளார்.
தமிழ் சினிமா உலகிற்குக்கு சின்னத்திரை மூலம் அறிமுகம் ஆனவர் சுசித்திரா. தனியார் தொலைக்காட்சியில் இவர் எடுத்த நேர்காணல் நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதே சமயம் இன்னொரு பக்கம் இவர் கோலிவுட்டில் பிசியாக பாடிக்கொண்டு இருந்தார்.
இவரின் பாடலும், நடனமும், கலை நிகழ்ச்சிகளில் இவரின் மாஸ் ஆட்டமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ஆனால் 2017ல் இவர் வெளியிட்ட சுச்சிலீக்ஸ் வீடியோக்கள் அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
2017ல் இவர் தமிழ் சினிமா உலகில் இருந்த பலர் குறித்த ரகசியங்களை வெளியிட்டார். சில பெண்களின் வீடியோக்களை கூட இணையத்தில் வெளியிட்டார். அதோடு தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பாலியல் சார்ந்த ரகசியங்களை வெளியிட்டார்.
இதனால் சுசித்திரா மற்றும் அவரது கணவர் கார்த்திக் குமார் இடையே பெரிய சண்டை வந்து அவர்கள் பிரிந்தார்கள். அதன்பின் வெளிநாடு சென்ற சுசித்திரா அங்கு உணவு தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பல்வேறு விதமான உணவுகளை சமைக்க முறையாக சுசித்திரா கற்றுக்கொண்டார். சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.
அதோடு தனது மன அழுத்தம், அச்சம் உள்ளிட்ட பல்வேறு மன ரீதியாக குறைபாடுகளுக்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இப்போதும் கூட அதற்காக தொடர் சிகிச்சையை இவர் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட்டு மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார் சுசித்திரா. ஆம் தனது சுச்சி இஸ் லைப் எனப்படும் suchislife என்ற யூ டியூப் பக்கம் மூலம் இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். I Dont Kno எனப்படும் பாடல் வீடியோ ஆகும் இது.
தனது நண்பர் ரஞ்சித் உடன் சேர்ந்து இந்த பாடலை இவர் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு சுசித்திரா இப்படி பாடல் பாடி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் பாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பல்வேறு விஷயங்களை கடந்த வந்திருக்கும் இவர் தனது கம் பேக் மூலம் சாதிக்க வாய்ப்புள்ளது என்று அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.