ராஜீவ் படுகொலை போல் தமிழகத்தில் திட்டமிடுகிறார்களோ? தமிழக அரசு நாடகம் ஆடுவது ஏன்?: ஹெச்.ராஜா!

Published:

hraja - 2026
file picture

தமிழக மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது போல், தமிழகத்தில் பிரதமரைக் கொலை செய்ய ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாகவே தெரிகிறது என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து:

நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது. – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நெல்லை கண்ணன் விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜா குறிப்பிட்ட போது…

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் என்பவர் திருவேல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கூட்டத்தில் பேசும் போது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் அநாகரீமாக விமர்சித்தத்தோடு முஸ்லிம்கள் அவர்கள் இருவரையும் முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஏன் தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இருவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று வன்முறையையும், கொலை வெறியையும் தூண்டும் வகையில் பேசிய காணொளி ஆதாரம் வெளிவந்திருக்கிறது …

தமிழக அரசும், காவல்துறையும் இந்நேரம் அவரை கைது செய்திருக்திருக்க வேண்டும். தாமதம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது …

அது மட்டுமல்ல நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது அவருடைய கருத்தா இல்லை காங்கிரஸின் திட்டமா என்கிற சந்தேகம் எழுகிறது …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். அவர் மெளனம் காக்கும் பட்சத்தில் நெல்லை கண்ணன் பேசிய பேச்சு காங்கிரஸின் திட்டம் என்பது உறுதியாகிவிடும் …

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
nellai kannan speech - 2026

மேலும் நெல்லை கண்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறேன் …

தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், தேசபக்தர்கள் அனைவரும் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் …

நெல்லை கண்ணனுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்களும், தேசபக்தர்களும் எவ்வித எதிர்வினையை ஆற்ற வேண்டும் என்பது குறித்து நாளை மாலை பாஜக மையக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் … – என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஹிந்து மதம் குறித்து இழிவு படுத்திப் பேசும் நெல்லை கண்ணனை ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

“பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை. கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா?”

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img