திரௌபதி டிரெய்லருக்கு குவியும் லைக்ஸ்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
draupathi trailer trending in tamilnadu - 2026

ஒரு படத்தின் டிரெய்லருக்கே இத்தனை வரவேற்பா என்று ஆச்சரியப் படுத்தும் விதத்தில், லைக்ஸ் குவிந்திருக்கிறது திரௌபதி படத்தின் டிரைலருக்கு!

அரசியல் சமூக மட்டத்தில் எத்தனை தூரத்துக்கு சினிமாக்களின் கழிசடைத்தனத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் ரசிகர்கள் என்பதற்கு அத்தாட்சியாத் திகழ்கிறது திரௌபதி படத்தின் டிரைலருக்கு குவியும் லைக்ஸ்கள்!

பழைய வண்ணாரப்பேட்டைக்கு பிறகு நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் திரௌபதி.

இப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் ட்ரைலர் தற்போது யூ டியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த ட்ரைலருக்கு கமெண்ட்சில் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. குறிப்பாக, யுடியூப் கமெண்ட் பாக்ஸில், தாங்கள் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டு அந்த ஜாதி மக்களின் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் போன்ற கமெண்ட்ஸ்களும் அதிகமாக இருக்கின்றன.

இப்படத்தின் கமெண்ட்ஸை பார்க்கும் போது தமிழ்நாட்டில் இவ்வளவு ஜாதிகள் இருக்கிறதா என்று எண்ணத் தோணுகிறது.

கடைசியில் படத்தின் முகப்பைப் பார்த்தால்… ஜாதிகள் உள்ளதடி பாப்பா… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் … என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.