
இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம் ஜன.4 (04.01.2020) அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். VP ஜெயக்குமார், பக்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர் .
2020 ஜனவரி மாதம் 4 ,5 தேதிகளில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை விரகனூர் ரிங் ரோடு சி .ஆர் மஹாலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் .. யோகேஸ்வரன் மற்றும் வினோதா யோகேஸ்வரன் ஆகியோர் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் , மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர்கள் நா முருகானந்தம், டாக்டர் த.அரசுராஜா, சி .பரமேஸ்வரன், மாநில அமைப்பாளர் க.பக்தன் உட்பட மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்களும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம் : உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் சித்தியடைந்தார் .
தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் பழமையான ஆதீனமான தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த மாதம் பரிபூரணம் அடைந்தார்.
மற்றும் காலஞ்சென்ற இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
மற்ற தீர்மானங்கள்:
- குடியுரிமை திருத்த சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது
- அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் ஆலயம் எழுப்பி விரைவில் கும்பாபிேகம் நடத்திட வேண்டும்
- ஸ்ரீ ராம ஜென்மபூமி வெற்றி தீர்ப்பின் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு
- குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் தேச விரோத சக்திகளுக்கு கண்டனம்
- இந்து முன்னணியின் எட்டாவது மாநில மாநாடு அழைப்பு தீர்மானம்
- தமிழக காவல்துறையின் மெத்தன போக்குக்கு கண்டனம்
- மசூதிகள் – வழிபாட்டு கூடங்களா அல்லது வன்முறைக்கு வித்திடும் கூடங்களா?
- பாகிஸ்தானின் கைக் கூலி திமுக.



