சிவன் – நயன் உறவு முறிந்ததா?

Published:

sivan nayan - 2026

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை நயன்தாராவின் காதல் மன்னனாக தற்போது உலா வந்து கொண்டிருந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா தனித் திறமையால் நடித்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்பது ஒருபுறம் திரைத்துறைக்கு பெருமையாக இருக்கிறது.

ஆனால், தனது காதலில் தற்போது மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அது என்னவென்றால் சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்கள்.

nayan sivan - 2026

கடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக சென்றுள்ளது, அதற்கான புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கிறிஸ்மஸ் முடிந்தபின் புத்தாண்டிற்கு வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nayandhara 1 - 2026

இந்த வாக்கு வாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் திருமணம் பற்றி கட்டாயப்படுத்திய தாகவும், ஆனால் தான் நம்பர் 1 நடிகையாக இருப்பதை இழந்து விடுவோம் என்ற பயத்தில் கல்யாணமே வேண்டாம் என்று கூறியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன்னுடைய உண்மையான திறமையை கவனம் செலுத்தாமல் வாய்ப்புகளை இழந்து விடாதே என்று அறிவுரையும் நயன்தாரா கூறியுள்ளார் . இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டாராம்.

ஆனால் நம்பர் ஒன் மோகத்தினால் வழக்கம்போல் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற ஜீ தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனியாக தான் வந்துள்ளார். பொதுவாக எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாத நயன்தாரா இதில் மட்டும் கலந்து கொண்டதற்கு காரணம் உள்ளது.

nayandhara - 2026

இவரது தனித் திறமையால் நேற்று சிறந்த நடிகைக்கான விருதை விஸ்வாசம் மற்றும் பிகில் திரைப்படத்திற்கு பெற்றுள்ளார். ஆனால் அதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் விதமாக டிரான்ஸ்பரன்ட் புடவையில் மிகவும் கவர்ச்சியாக வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. திறமை இருக்குமிடத்தில் கவர்ச்சி இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றே கூறலாம்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

திறமையான நடிகைகள் இதுபோன்ற முடிவுகள் எடுப்பதில் பெருமை பெற்றுக் கொள்வதா அல்லது மூன்றாவது முறையாக காதல் தோல்வி அடைந்துள்ள நயன்தாராவை பற்றி கவலைப் படுவதா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மீண்டும் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

Related articles

Recent articles

spot_img