வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!

Published:

vaikuntaekadasi nathankoil nandipuravinnakaram - 2026

இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து அருள் பெற்றனர்.

இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் அதிகாலையும், இராப் பத்து உத்ஸவம் கொண்டாடப் படும் ஆலயங்களில் மாலையும் வைகுண்ட வாசல் திறப்பு நடைபெறுகிறது.

vaikuntaekadasi nathankoil nandipura vinnakaram - 2026
நாதன் கோவில் திருநந்திபுர விண்ணகர வைகுண்ட ஏகாதசி

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
vaikuntaekadasi nathankoil - 2026
நாதன் கோவில் திருநந்திபுர விண்ணகர வைகுண்ட ஏகாதசி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img