பிரபல நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

சினி நியூஸ் சினிமா
jammila - 2026

1972இல் கால் பதித்து தனது வித்தியாசமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர் நடிகை ஜமீலா மாலிக். இவர் தமிழ் சினிமாவில் வெள்ளிரதம் அழகிய ராகம் நதியை தேடி வந்த காதல் லட்சுமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜமீலா புனேவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல் பெண் மாணவராவார். அதனை தொடர்ந்து அவர் மலையாளத்தில் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆத்யாதே கதா என்ற படத்தின் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்தார்.

jamila 1 - 2026

அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி அவர் மலையாள தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதனை தொடர்ந்து திங்கள் இரவு சிகிச்சைபலனின்றி நடிகை ஜமீலா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.