தமிழ் சினிமாவில் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டவர் சிம்ரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன்.
தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையில் மாதவன் உடன் நடிக்கிறார். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி ஹிந்தியில் சிம்ரன் நடித்த வீடியோ ஆல்பம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன் அவரது பாணியில் கவிதையாக விவரித்துள்ளார். அதில், ”காதலுக்கு லுக் தேவையில்லை, வயது தேவையேயில்லை.
மனது மட்டும் பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது. சிம்ரன் அக்காலம், இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும் காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர். தீவிர(ரசனை)வாதி” என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.
காதLook-கு ….
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 14, 2020
Look தேவையில்லை,
வயது தேவையேயில்லை,
மனது மட்டுமே பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது!
சிம்ரன் அக்காலம் இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும்
காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்! தீவிர(ரசனை)வாதி!https://t.co/t6jNQRCkCn