நடிகர் விஜய்க்கு மாஸ்டர் பட ஷூட்டிங் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தது பெரிய வைரலாகி உள்ளது.
நடிகர் விஜய்யும் விஜய் சேதுபதியும் தற்போது ஒன்றாக நடித்து வருகிறார்கள். மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர், நேற்று முதல் நாள், இந்த படத்தின் செட்டில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாஸ்டர் படத்தின் கலை இயக்குனர் சதிஷ் குமார் நேற்று முதல்நாள் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
இதனால் மாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் போல தன்னுடைய பாணியில் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதை அருகில் இருந்து விஜய் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அதன்பின் எல்லோருக்கும் முன் விஜய் சேதுபதியிடம் சென்ற விஜய், எல்லோருக்கும் முத்தம் கொடுக்கிறீங்க, எனக்கு மட்டும் ஏன் தரல என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து விஜய் சேதுபதி விஜய்க்கு அவர் கேட்டது போலவே முத்தம் கொடுத்தார். விஜய் கட்டிப்பிடித்து, அவரின் இரண்டு கன்னத்திலும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார்.
இதை அங்கிருந்த பலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி முத்தம் கொடுத்துக் கொண்டது இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.