பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
அதனை தொடர்ந்து அவருக்கு வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட நடிகர் கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியாவிடம் அவரது காதலன் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் எந்த ஒரு பிரபல அந்தஸ்த்தும் இல்லாத நாளிலிருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.
இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார். மேலும் இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன் என எமோஷனலாக பேசியுள்ளார் பிரியா.