செல்போனில் திரைப்படம் எடுப்பது புதிதில்லை. இதற்கு முன் சில முயற்சிகள் நடந்திருக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருக்கும் சூழ்நிலையில் செல்போனிலேயே ஒரு படம் தயராகி இருக்கிறது.
இதில் ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம், வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராகுல் கபாலி கூறியதாவது: இது ஒரு துப்பறியும் கதை. நான்கு கேரக்டர்கள் மட்டுமே உண்டு.
முதலில் கதையின் ஸ்கிரிப்டை தயார் செய்து அதற்கு ஸ்டோரி போர்ட் ரெடி செய்தோம். அதை நடிக்கும் 4 பேருக்கும் அனுப்பி வைத்து அவர்கள் பகுதியை அவர்கள் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்களே நடித்து அனுப்புமாறு சொன்னோம்.
அப்படியே செய்தார்கள். பின்னர் அதை ஒரு படமாக இணைத்திருக்கிறோம். படப்பிடிப்புக்கு கியூ ஐ போன் 8, 9. மற்றும் 11 வகை போன்களை பயன்படுத்தினோம். படத்தை முடித்து இணையதளத்தில் வெளியிட இருக்கிறோம். என்றார்.