பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! அப்படியா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சினி நியூஸ் சினிமா
vidhya

நடிகை வித்யூராமன் இன்ஸ்டாவில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீதானே எந்தன் பொன் வசந்தம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, வேதாளம், வீரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தான் வித்யூராமன். காமெடி ரோலில் நடித்து வரும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

vidhu

பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், கடந்த ஓராண்டாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்

இப்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் எடையை குறைத்தது குறித்து இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் கல்யாணம் குறித்து தகவல் வெளியிட உள்ளதாகவும் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் எழுதியுள்ளார்.

vidhuraman

இவரின் இந்த பதிவை அடுத்து திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவை இதுவரை சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.