பிக் பாஸுக்காக பிட்டு பட அவதாரம் எடுத்தாரா? சீரியஸ் ஆன சீரியல் நடிகைகள்!

Published:

டிவி சீரியல் நடிகைகள் ஷிவானி, சித்ரா இருவரும் எண்டர்டெய்ன்மெண்ட் மாஸ்டர்களாக சமூகத் தளங்களில்

shivani narayanan

 

வனிதா விஜயகுமாருக்கும்  லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையிலான சர்ச்சைகள் கச்சை கட்டி கல்லா கட்டிய நிலையில் நான் இருக்கேன் மக்காஸ் என்று களத்தில் இறங்கினார் மீரா மிதுன்.  அந்த பரபரப்பும் சற்று ஓய்ந்து போய்… பொழுது போக்குக்கு என்ன செய்யலாம் என்று பலர் இறுமாந்து ஏமாந்து இருந்த நிலையில்,  நாங்கள் இப்போது கை கொடுப்போம் என்று களத்தில் இறங்கி விட்டார்கள்… சீரியல் நடிகைகள்… வெகு சீரியஸாக!

தற்போது டிவி சீரியல் நடிகைகள் ஷிவானி, சித்ரா இருவரும் எண்டர்டெய்ன்மெண்ட் மாஸ்டர்களாக சமூகத் தளங்களில் குங்க்பூ கராத்தே எல்லாம் போட்டு கமெண்டுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருக்க,  ரசிகர்களுக்கு புதிய என்டர்டைன்மென்ட் விருந்தே கிடைத்து வருகிறது.  

5 மணி பஸ் என பெயர் எடுத்த பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானியை கிண்டல் செய்யும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா பிட்டு படங்கள் வேண்டும் என்றால் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடாதீர்கள். 2000 ஆண்டில் பிறந்த பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுங்கள் என சர்ச்சை கிளப்பும் வகையில் கோலம் போட முதல் புள்ளியை வைத்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
ad62907abb128431798764a3b353b060 - 2026

2001ம் ஆண்டு பிறந்த 19 வயதான நடிகை ஷிவானி தான் அவர் என்று மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட…  அவர் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலிவுட் நடிகைகளுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் விதமாக கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி உசுப்பேற்றி வருகிறார் என்று பதில்களும் பெரிதாக உலா வந்தன. 

சித்ராவின் இந்தப் பதிவுக்கு கீழே ரசிகர்கள், நீங்கள் ஷிவானியைத் தானே குறிப்பிட்டுள்ளீர்கள் எனக்கேட்க…  இந்தக் கருத்து நடிகை ஷிவானியின் கவனத்துக்குச் சென்றது.

அதற்கான பதில் ரொம்பவே விகாரமாகவும் விவகாரமாகவும் வந்த்து… என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் என்னை தினமும் பார்த்து ரசிக்கும் நீயும் என் ரசிகை தான்… என கொஞ்சம் கெட்ட வார்த்தையையும் கலந்து  அதிரடி பதில் கூறினார் அவர். 

0eb77ac31db03b4eb76a513dd3370c88 - 2026

அடுத்தவர் பற்றி பேசும் முன் உன் முதுகையும் கொஞ்சம் பார் என நடிகை சித்ராவுக்கு அவர் பதில் கொடுக்க… படங்கள் பகிரலும் சூடு பிடித்தது. இரு சீரியல் நடிகைகள் நேரடியாக பெயர் சொல்லிக் கொண்டு மோதிக் கொள்ளவில்லை என்றாலும் ; இரண்டு நடிகைகளுக்கு இடையே தான் இந்தப் பிரச்னை என்று தெரிந்து கொண்டதால், ரசிகர்கள் மேலும் மேலும் இந்த டஃப் ஃபைட்டை தணியாமல் பார்த்து  குளிர்காய்ந்து வருகின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
3faef71d227d04dd58948affc52f87dd - 2026

இது பிக்பாஸ் கவனத்தைப் பெற நடக்கும் பப்ளிக் ஸ்டண்ட் என்று கூறுகின்றனர் சிலர்.  பிக் பாஸ் சீசன் 4 இல் நடிகை ஷிவானி கலந்து கொள்ள இருப்பதால் தான் இப்போது வேண்டுமென்றே இந்த சர்ச்சையை கிளறி வருகின்றனர் என்றும் அவர்கள் கமெண்ட் கொடுக்கின்றனர்.  

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img