ரசாயனம் வெடித்து… கண நேரத்தில் சிதறிய தந்தை மகன் உடல்கள்!

Published:

chemical-blast
chemical-blast
  • விஜயவாடாவில் ரசாயனம் வெடித்த சம்பவம்.
  • கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் காற்றில் பறந்து விழுந்த தந்தை-மகன் உடல்கள்.

விஜயவாடா அருகில் வெடிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

கன்னவரம் மண்டலம் சூரப்பல்லி தொழிற்சாலை ஏரியாவில் உள்ள ஜெயராம் பிளைவுட் கம்பெனிக்கு விஜயவாடாவில் இருந்து ஸ்க்ராப் மெட்டீரியல் வாங்குவதற்காக தந்தையும் மகனும் சூரப்பல்லி வந்தார்கள்.

இருவரும் டப்பாக்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகிலேயே மேலும் இருவர் கூட இருந்தார்கள். தந்தையும் மகனும் தம் வேலையில் மூழ்கி இருக்கும்போது ஒரேடியாக டப்பாக்கள் வெடித்துச் சிதறின.

வெடித்த அதிர்ச்சியில் இறந்த உடல்கள் காற்றில் பறந்து 50 அடி தூரத்திற்கு சென்று விழுந்தன. கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இந்த காட்சி முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img