
ஆர்.ஜே.பாலாஜியுடன் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த போது நயன் விரதம் இருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அதை பலரும் நம்பாமல் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், இப்படம் பற்றி பேசியுள்ள ஆர்.ஜே.பாலாஜி ‘அம்மன் பக்தி படம் மக்கள் பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. எனவேதான் இப்படத்தை துவங்கினோம். இதற்கு முன் கே.ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அம்மனாக நடித்துள்ளனர். எனவே, தற்போது யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்த போது நினைவுக்கு வந்தவர் நயன்தாரா.
கதையை கேட்டதும் நயன் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேநேரம் சில நிபந்தனைகள் விதித்தார். படப்பிடிப்பில் நான் விரதம் இருந்துதான் நடிப்பேன். நீங்களும் விரதம் இருக்க வேண்டும். கூறிய நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்றார். அவர் கூறியது போலவே நாங்களும் விரதம் இருந்தோம். 24 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியெனில் நயன்தாரா இப்படத்திற்காக விரதம் இருந்தார் என வெளியான செய்தி உண்மைதான் போலிருக்கு!…
Source: Vellithirai News



