
திருத்தணியில் இருந்து இன்று வேல் யாத்திரையை துவங்குவதாக பாஜகவினர் அறிவித்தனர். ஆனால், இந்த ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆனாலும், தடைகளி மீறி யாத்திரையை நடத்துவோம் என பாஜக தலைவர் முருகன் நேற்று அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை பாஜக தலைவர் முருகன் வேலுடன் திருத்தணி சென்று தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பல கார் மற்றும் வேன்களில் பாஜக தொண்டர்கள் உடன் சென்றனர். எனவே, திருத்தணியில் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். அப்போது முருகனை போலீசார் கைது செய்தனர். அதேபோல், முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே பாஜக ஆதரவாளர்கள் டிவிட்டரில் #துள்ளி_வருது_வேல் என்கிற ஹேஷ்டேக்கில் பாஜகவிற்கு ஆதரவாகவும், வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. அதேபோல், #தடை_அதை_உடை, #வெற்றிவேல்_யாத்திரை என்கிற ஹேஷ்டேக்கும் தமிழகத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
Pic of day 👌 @tnbjpitwing@CTR_Nirmalkumar @BJP4TamilNadu@Murugan_TNBJP#வெற்றிவேல்_யாத்திரை#துள்ளி_வருது_வேல்#பாஜக#தடை_அதை_உடை pic.twitter.com/nv6ODCbi11
— Venk At (@VenkaTweetesh) November 6, 2020



