
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் டைட்டில் டீசர் வீடியோ நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் டீசர் அறிமுக விழா நடைபெற்றது.
இதில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘படத்தின் தலைப்பு வெறும் போஸ்டராக வெளியிடாமல் டீசராக வெளியிடுவோம் என தோன்றியது. கொரொனா அச்சுறுத்தல் இருப்பதால் கமல் சாரிடம் இதை தயக்கத்துடன் சொன்னேன். ஆனால், அவர் ஆர்வமாகி மற்றவேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு நடித்துக்கொடுத்தார். அவரின் பிறந்தநாளுக்கு இதை விட சிறப்பான பரிசை எங்களால் கொடுத்திருக்க முடியுமா என எங்களுக்கு தெரியவில்லை’என அவர் கூறியுள்ளார்.
Source: Vellithirai News



