துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்

சினி நியூஸ் சினிமா

mohan

நடிகர்கள் என்றால் பல கோடிகளில் சம்பளம் வாங்குவது எல்லோருக்கும் தெரியும். மேலும், ஓய்வெடுக்க ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் அழகான ரம்மியமான இடங்களில் வீடு வாங்கி வைத்திருப்பார்கள். கோடைகாலம் மற்றும் படப்பிடிப்புகளுக்கு இடையே ஓய்வு தோன்றினால் அங்கு சென்று ஓய்வெடுப்பது அவர்களின் வழக்கம்.

இதில், வெளிநாடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்திருப்பது உண்டு. குறிப்பாக துபாயில் பல நடிகர்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கி குவித்துள்ளனர்.

dubai

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் வீடு வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல், மலையாள நடிகர்  மோகன்லாலுக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. சமீபத்தில் புதிய வீட்டையும் வாங்கியுள்ளார். அதேபோல், பாலிவுட் பிதாமகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு தனித்தனியாக அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.