செம ட்ரெண்ட்: வலிமை பட அம்மா சென்டிமென்ட் பாடல்!

Published:

valimai ajith - 2026

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த வலிமை திரைப்படத்தின் தொடக்கப்பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது.

போனி கபூரின் தயாரிப்பில் அஜீத்துடன் இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பனி, சுமித்ரா, அச்சுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் வேலுக்குட்டி கவனித்துக் கொள்கிறார். திலீப் சுப்புராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

ஏற்கனவே வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வலிமை திரைப்படத்தின் 2-ஆம் பாடலான அம்மா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

“நான் பார்த்த முதல் முகம் நீ”, “நான் கேட்ட முதல் குரல் நீ” என அஜீத்தின் குரலில் தொடங்கும் வரிகளை அடுத்து இந்த பாடலை சித் பாடுகிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அம்மா.. என் முகவரி நீ.. அம்மா என் முதல் வரி நீ .. அம்மா என் உயிரென்றும் நீ அம்மா” என அம்மா பாசத்தை எளிமையாகவும், உணர்வுடனும் கடத்தும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதில் நடிகர் அஜீத் குமாரின் ‘வலிமை’ மற்றும் ‘வீரம்’ ஆகிய படங்களின் பெயர்களும் இந்த பாடலில், “உன் வாசம் எனக்கு வலிமை தரும்.. உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்” ஆகிய வரிகளில் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img