சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக கபாலி படத்தில் நடித்த நடிகை தன்ஷிகா அதன் பின்னர் தமிழில் நல்ல வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தற்போது முதல்முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்
மேளா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கிரண் இயக்கி வருகிறார். இவர் பிரபல தெலுங்கு பட கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தில் தன்ஷிகா டூப் இன்றி ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நடித்து இயக்குனரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.




