வாழ்வில் வளம் தரும் வலம்புரி சங்கு
மனித வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் விலகவும், இஷ்ட சித்திகள் பூர்த்தியாகவும் இறைவழிபாடுதான் துணையாக இருக்கிறது. எங்கும் நிறைந்தவன் கடவுள் என்கிற அடிப்படையில், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லப்பட்டாலும், இறை அம்சங்களாகவே திகழ்வது சில. சிவனின் அம்சமாக ருத்ராட்சம், விஷ்ணுவின் வடிவமாக சாளகிராமம், சரஸ்வதியின் அம்சமாக ஸ்படிகம் என்கிற வரிசையில் மகாலக்ஷ்மியின் வடிவமாக, அம்சமாக வருவது வலம்புரிசங்கு. பாரம்பரிய குடும்பங்களில் செல்வத்தை ஈர்க்க வலம்புரி சங்கையே பூஜித்திருக்கிறார்கள். அதன் பலனாக தடையற்ற செல்வ பெருக்கோடு, தனவந்தர்களாக இருந்திருக்கிறார்கள். ராமநாமம் உச்சரிக்கும் இடமெல்லாம் ஆஞ்சநேயன் இருப்பதுபோல், பெருமாளை துதிப்போர்ரை பின்தொடரும் சக்கரத்தாழ்வார்போல், ருத்ராட்சம் அணிந்தோரை பூதகனம் காப்பதுபோல், வலம்புரி சங்கிருக்கும் இடமெல்லாம் தனலக்ஷ்மி வாசம் செய்வாள். சங்கின் மகிமையை பெருமையை அறிவதற்கு முன் சங்கின் வரலாற்றை பார்பபோம்.
வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு
Popular Categories



