
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரைத்துறையில் பிசியாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது ‘காஞ்சனா 3’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் சினேகன் நடித்து வரும் படமான ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஒன் லைன் கேட்டு ஓகே கூறிய ஓவியா விரைவில் முழுக் கதையையும் கேட்டு இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது முடிவை கூறுவதாக தெரிவித் துள்ளாராம். ‘யமுனா’ என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு ‘பனங்காட்டு நரி’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.



