
பழனி ஆண்டவர் கோயில் விவகாரமாக வெளிவரும் தகவல்கள் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தர் போகரால் புகழ்பெற்ற நவபாஷாண சிலையை சுரண்டி நாசமாக்குகிறார்கள் என்று ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் பல்லாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சிலை விவகாரத்தில் பழனி சம்பவம் ஒரு மோசமான பின்னணியைக் காட்டியுள்ளது.
இதில், ஸ்தலபதியான பழனியாண்டவன் பேரில் பலருக்கும் பயம் கலந்த பக்தி இருக்கிறது. வேல் வழிபாடு கோலோச்சும் பழனியில் வேல் தயாரிப்பில் கூட கலப்படம் காட்டக்கூடாது என்று உறுதியாக இருப்பவர்கள் முருக பக்தர்கள். ஆனால், சிலை விவகாரத்திலேயே முறைகேட்டை செய்துள்ளனர், ஸ்தபதி உள்ளிட்டோர்.
தவறு செய்பவர்களுக்கு முருகன் உடனே தண்டனை கொடுத்துவிடுவான் என்று எத்தனை சினிமாக்கள் பழனி ஆண்டவன் மகிமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன?ஆனால், அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு, முத்தையா ஸ்தபதி சிலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார். இத்தகைய பின்னணியில், இது குறித்து நம் வாசகர் அனுப்பி வைத்த வைரல் பதிவு இது!
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்ற நிகழ்வுகள் பழனி மலைக்கோயில் நவபாசான தண்டாயுதபாணி மூலவர் திருமேனி சம்பந்தமாக நடத்தப்பட்ட குற்றங்கள்.
• குற்ற நிகழ்வுகள் 2003 மற்றும் 2004 வருடங்களில் நடந்துள்ளது.
• குற்றத்தின் மறைமுகமான முக்கிய நோக்கம் எப்படியாவது ஏதாவது காரணங்கள் காட்டி அதாவது தொடர்ந்து இந்த நவபாசான மூலவர் திருமேனிக்கு பல ஆயிர வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த கோடிக்கணக்கான அர்ச்சனைகளாலும் மற்றும் நவபாசானத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி திருமேனிக்கு தொடர்ந்து சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும், இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் நவபாசான திருமேனிக்கு பதிலாக ஒரு 200 கிலோ எடை கொண்ட முழுக்க முழுக்க தங்கத்தினாலான ஒரு தங்க உலோக திருமேனி செய்து அதை நவபாசான மூலவர்திருமேனிக்கு எதிரே கர்ப்பகிரகத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து அதற்கு பிறகு ஒரிரு வருடங்களுக்குப் பிறகு மெதுவாக நவபாசான மூலவர் திருமேனியை சேதப்பட்டு விட்டது என்ற அடிப்படையில் கற்பகிரகத்திலிருந்து அகற்றி வேறு ஒரு அறையில் பாதுகாப்பு என்ற அடிப்படையில் வைத்து ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அந்த நவபாசான மூலவர் திருமேனியை பழனி மலைக் கோவிலிருந்து அகற்றி வெளிநாட்டு அருங்காட்சியத்திற்கு விற்று பெரும் பொருள் ஈட்டுவதே இக் குற்றங்களில் உள்ள ரகசிய உள்நோக்கம்.
• ஆனால் நவபாசன திருமேனியின் முகம் மார்பு கைகள் வயிற்று பகுதி இடுப்பு பகுதி பின்னங்கால் முன்னங்கால் பகுதி குறிப்பிட்டு சொல்லும் வகையில் சேதம் ஏதும் தென்படவில்லை.

• இது போக நவபாசான மூலவர் திருமேனிக்கு வருடந்தோறும் நடைபெறும் கோடிக்கணக்கான அபிஷேகங்களால் மேலும் சேதம் நடைபெறாமல் தடுக்க 1984-ம் ஆண்டில் தெய்வ பக்தி கொண்ட நீதிபதி திரு. சதாசிவம் அவர்களின் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு பெரிய மடாதிபதிகள் சமய பெருமான்கள் ஆகம பெரியோர்கள் விஞ்ஞானிகள் நீண்ட அனுபவமிக்க அர்ச்சகர்கள் பெரிய பக்திமான்கள் அகியோர்களின் தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த கருத்தினை நீதிபதி அவர்கள் பெற்று அதன்படி நவபாசான மூலவர் திருமேனிக்கு நாள் ஒன்றுக்கு 6 கால பூசை மட்டும் இந்து அறநிலையத்துறையால் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் கோடிக்கணக்கான பக்தர்களிடமிருந்து பெறப்படும் அபிஷேக ஆராதனை பொருட்களை மலைக்கோவிலில் ஏற்கனவே உள்ள உற்சவ மூர்த்திக்கு கர்ப்பகிரகத்தில் வைத்தே செய்யலாம் என்றும் தெளிவாக பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு முடிவினை நீதிபதி திரு. சதாசிவம் அவர்களால் எடுக்கப்பட்டு அது இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
• இது இங்ஙனம் இருக்க புத்தம் புதிதாக 200 கிலோ எடையில் முழுக்க முழுக்க தங்கத்தில் ஒரு புது தண்டபாணி சிலை செய்யப்பட வேண்டும் என்றும் அது கர்ப்ப கிரகத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும் அதனை நவபாசான மூலவர் திருமேனிக்கு எதிரே அதை மறைக்கும் அளவிற்கு உயரம் கொண்ட புது திருமேனியை செய்ய வேண்டும் என்ற கருத்துரையும் தீர்மானமும் எவ்வாறு யார் யாரால் எப்போது எதற்காக என்ன உள்நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்ற வெளிச்சத்திற்கு வராத உண்மைகளை புலன் விசாரணை செய்து கண்டறிந்து அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த புலன் விசாரணை குழுவின் நோக்கம்.
• இவ்வாறு 13-ம் நூற்றாண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சேர சோழ பாண்டிய அரசர்களுக்கும் அதற்கு பிறகு இக்கோவிலின் பொறுப்பை ஏற்ற சமய குரவர்கள் மடாதிபதிகள் மற்றும் பக்திமான்களுக்கும் இல்லாத அக்கறையும் பொறுப்பும் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள மனிதர்களுக்கும் அவர்களுக்குப்பின் நின்று மறைமுகமாக இயக்கியவர்ளுக்கும் திடீரென்று அக்கறை ஏன் ஏற்பட்டது? என்பதை கண்டறிய வேண்டிய அவசியம் புலன் விசாரணை குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
• ஏற்கனவே பக்திமான் நீதிபதி திரு.சதாசிவம் அவர்களால் நவபாசான மூலவர் திருமேனிக்கு 1984-ல் எடுக்கப்பட்ட ஒரு முழுமையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து முடித்த பிறகும் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள மனிதர்களுக்கும் அவர்களை இரகசியமாக பின்நின்று இயக்கியவர்களுக்கு என்றுமில்லாத அக்கறை ஏன் திடீரென்று 2003-2004ல் முளைத்தது என்பதை ஆராயும் கட்டாய கடமை புலன் விசாரணைக்கு ஏற்பட்டுள்ளது.
• கலியுகத்திற்குப் பிறகு 250-வது வருடத்தில் புலிப்பாணி முனிவருக்கு நவபாசான மூலவர் திருமேனிக்கு எவ்வாறு எப்படி என்றென்று எத்தனை வழிபாட்டு பூசைகள் நடத்தப்பட வேண்டும் என்று போகர் சித்தர் அறிவுறுத்தியுள்ளார் என்று மலைக்கோவிலில் உள்ள போகர் குகைக்கோவிலில் செய்திகள் அடங்கியுள்ளன.

• இது இங்ஙனம் இருக்க 2003-ம் வருடத்திலிருந்து போகர் சிலைக்குப் பதிலாக 200 கிலோ முழுக்க முழுக்க தங்கத்திலோ அல்லது 10 கிலோ தங்கம் உள்ளடக்கிய 200 கிலோ எடையுள்ள ஐம்பொன் தண்டாயுதபாணி புதிய திருமேனி செய்யப்பட வேண்டும் என்றும் அப்புதிய திருமேனி கர்ப்பகிரகத்திலுள்ள நவபாசான மூலவர் திருமேனிக்கு எதிரே மிக அருகில் வைக்க வேண்டும் என்றும் அர்ச்சனைகள் அனைத்தும் புதிய திருமேனிக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் புலனாகியுள்ளது. ஆனால் இதற்கு உண்மையிலேயே யார் யார்; காரணம் பின்னணி என்ன? என்பதைப் பார்க்க வேண்டிய அவசியம் புலன் விசாரணைக்கு ஏற்பட்டுள்ளது.
• 200 கிலோ எடையுள்ள புதிய திருமேனி செய்வதற்கு வேண்டிய 10 கிலோ தங்கம் திருத்தணி முருகப் பெருமான் கோவிலிருந்து கடனாக பெறப்பட்டதாக புலனாகியுள்ளது. அதே உத்தரவில் அந்த புதிய சிலை ஐம்பொன் சிலையாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக மலைக்கோவில் தண்டாயுதபாணி முருகப்பெருமான் திருக்கோவில் நிதியிலிருந்து தங்கத்தை தவிர 4 உலோகங்கள் வாங்குவதற்கு அப்போதிருந்த நிர்வாக அதிகாரியால் நிதி ஒதுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருக்கிறது. புதிய திருமேனியை ஆகம விதிமுறைகளுக்கு மாறாக மலைக்கோவிலியே செய்ய உத்தரவிடாமல் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள ( ஏற்கனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிவன் திருக்கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலைக்குப் பதிலாக புதிய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் கொடையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான நகை கையாடல் வழக்கில் ஏ-1 குற்றவாளியாக இருந்து முன்ஜாமீன் பெற்றுள்ள முத்தையா ஸ்தபதி) இந்து அறநிலையத்துறை மூத்த ஸ்தபதியான முத்தையா ஸ்தபதியின் சொந்த பட்டறையான “கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்வர்ணம் சிற்பக் கலைக் கூடத்தில்” வைத்து செய்ய உத்தரவிடப்பட்டிருப்பது புலனாகியுள்ளது.
• மேலும் முத்தையா ஸ்தபதிக்கு உலோகத் திருமேனிகள் செய்வதற்கு எந்தவித அந்தஸ்தோ அங்கீகாரமோ அருகதையோ கிடையாது. காரணம் இவர் கல்சிற்பங்கள் செய்வதற்கு மட்டுமே இவருக்கு அங்கீகாரம் உள்ளது. இவர் கெட்டிக்காரத்தனமாக எதிர்காலத்தில் கிரிமினல் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக முன்கூட்டியே யோசனை செய்து தனக்குத் தெரிந்த மற்றொரு ஸ்தபதியை வைத்து 2004-ல் புதிய திருமேனியை அப்போதைய ஆணையர் உத்தரவிற்கு எந்த வகையிலும் உட்படாமல் 10 கிலோ தங்கம் உள்ளடக்கிய 200 கிலோ புதிய திருமேனி செய்வதற்காக 53 கிலோ எடையுள்ள மற்ற 3 உலோகங்களை ஏதோ அவைகள் தன் இருப்பில் இருந்த சொந்த உலோகங்கள் என்றும் அதனை புதிய திருமேனி செய்வதற்கு தேவையான ஆணையர் உத்தரவை பெறாமல் தன்னிச்சையாக சேர்த்து உருக்கி புதிய திருமேனி செய்துள்ளார்.
• ஆனால் புதிதாக செய்த தண்டாயுதபாணி திருமேனி ஐம்பொன்னால் செய்யப்படாமல் 4 உலோகங்களால் செய்யப்பட்ட திருமேனி என்ற உண்மை புலனாகியுள்ளது. புதிய தண்டாயுதபாணி சிலை ஐம்பொன் சிலை அல்ல என்று சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு புலன்விசாரணை அதிகாரி ராசாராம் மற்றும் கருணாகரன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
• புதிய திருமேனி 10 கிலோ உள்ளடக்கிய 200 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். அதாவது 205 கிலோவோ அல்லது 195 கிலோ எடையுள்ளதாக இருந்தால் காரண அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது உத்தரவிற்கு மீறிய அதிகப்படியான எடையுள்ள 221.08 கிலோ எடையுள்ள திருமேனி என்பது தற்சமயம் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
• புதிய திருமேனியின் எடை (செய்து முடித்தபிறகு) 221.08 கிலோ எடைதான் என்று 2004-ம் வருடத்திலேயே எடை போட்டு நிர்ணயிக்க அப்போதுள்ள தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள பழனி கோவில் நிர்வாக அதிகாரி திரு.கே.கே.ராஜா மற்றும் 2004-ல் சிலை செய்த இடத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று நியமிக்கப்பட்ட மற்ற அதிகாரிகளும் செய்து முடித்த தண்டாயுதபாணி புதிய திருமேனியின் எடை 221.08 கிலோ என்று நிர்ணயம் செய்யாமல் (சட்டப்படி எடுக்கப்பட வேண்டிய இச்சிறு கடமையைக் கூட) ஏதோவொரு கெட்ட உள்நோக்கத்திற்காக வேண்டுமென்றே கடமையை புறக்கணித்துள்ளனர். ஏன் இவ்வாறு செய்தனர்? யார் உத்தரவின் பேரில் இவ்வாறு செய்தனர்? இவ்வாறு இவர்கள் ஏன் செய்தனர்? அது சட்டப்படி தவறு என்று தெரிந்தபிறகும் ஏன் அதற்கு உடன் போனர்? என்றும் அவர்களுடைய உள்நோக்கம் என்ன? முத்தையா ஸ்தபதி தன் கையிருப்பில் இருந்ததாக சொல்லப்படும் 53 கிலோ எடையுள்ள 2 உலோகங்களை மொத்த உலோகமாக உருக்கி போட எவ்வாறு யார் உத்தரவிட்டார்கள்? ஏன் அன்று அங்கிருந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டு தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதியை அனுமதித்தனர் என்பதை ஆராயும் கடமை புலன் விசாரணை குழுவிற்கு எழுந்துள்ளது.
• புதிய திருமேனி ஐம்பொன்னாக இருக்க வேண்டுமென்பது அவசியமானது. அதுவே ஆணை. ஆனால் புதிய தண்டாயுதபாணி உலோகத் திருமேனியில் 4 உலோகங்கள் மட்டுமே உள்ளடக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐம்பொன் விக்ரகங்களில் முக்கியமாக இடம்பெறும் “வெள்ளி உலோகம்” இப்புதிய திருமேனியில் இல்லை என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளி எள்ளளவு கூட இல்லையாம்.

• இப்படி 221.08 கிலோ புதிய தண்டாயுதபாணி திருமேனி எவ்வாறு அன்றையதினம் பொறுப்பிலிருந்த கே.கே.ராஜா மற்றும் குற்றவாளி முத்தையா ஸ்தபதியின் கேளம்பாக்கம் பட்டறையிலிருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர் என்பது புலன்விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது?.
அதாவது உத்தரவிற்கு மீறி 21.08 கிலோ எடையுள்ள உலோகங்கள் அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. யாருடைய உத்தரவு? யார் யார் அனுமதித்தது? போகரால் பொது வழிபாட்டிற்காக எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட நவபாசான மூலவர் சிலைக்குப் பதிலாக புதிதாக செய்யப்பட்ட 4 உலோக தண்டாயுதபாணி திருமேனியில் “தனிப்பட்ட ஒரு நபரின் 21 கிலோ எடை உலோகங்கள்” எந்தவித ஒரு ஆணையுமின்றி எவ்வாறு கலக்கப்பட்டது? அவ்வாறு கலக்கப்பட்ட அதிகப்படியான 21 கிலோ உலோகங்கள் உண்மையிலேயே நேர்த்தியான உலோகங்கள் தானா? (இன்னும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நிலைத்து நிற்க கூடியனவா?) என்றும் உண்மையிலேயே அந்த உலோகங்களை அங்கீகாரமற்ற மற்ற மனிதர்கள் எவரேனும் கொடுத்தனரா? என்று புலன் விசாரணை செய்யப்பட அவசியம் ஏற்பட்டுள்ளது.
• உண்மையிலேயே எவ்வளவு தங்கம் திருத்தணி முருகன் திருக்கோவிலிருந்து பெறப்பட்டது? கடனாக பெறப்பட்டதாக சொல்லப்படும் 10 கிலோ தங்கம் உண்மையிலேயே புதிய சிலை வார்ப்பெடுப்பில் போடப்பட்டதா? அல்லது உண்மையிலேயே 10 கிலோவிற்கு மேல் தங்கம் கொடையாக இந்து அறநிலையத்துறையால் அனுமதிக்கப்படாத மற்றவர்களிடமிருந்து கொடையாக பெறப்பட்டதா? அவ்வாறாயின் எவ்வளவு கிலோ தங்க உலோகம் அல்லது தங்க ஆபரணங்கள் அல்லது ரொக்கம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டது? யார் யாரெல்லாம் பெற்றார்கள்? எங்கிருந்து பெறப்பட்டது? வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதா? வெளி மாநிலத்திலிருந்து பெறப்பட்டதா? இந்து சமய அறநிலையத்துறையால் அங்கீகாரம் பெறப்படாத கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட மிகையான தங்க உலோகம் எவ்வாறு புதிய தண்டாயுபாணி உலோக திருமேனியில் சேர்க்கப்பட்டது?
கொடையாக பெறப்பட்ட அனைத்து தங்க உலோகங்களும் புதிய திருமேனியில் போடப்பட்டதா? அல்லது போடப்படாமல் கெட்டிக்காரத்தனமாக ஆவணங்கள் உருவாக்கப்பட்டு கையாடல் செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் எவ்வளவு தங்கம் யார் யாரால் கையாடப்பட்டு பங்கு போடப்பட்டுள்ளது? மிகையாக பெறப்பட்டதாக சொல்லப்படும் தங்கம் ஏன் கணக்கில் காட்டப்படவில்லை? இந்த அதிமுக்கிய கணக்கு எழுதப்படாமல் வேண்டுமென்றே தெரிந்தே அவ்வாறு செய்வது பொய்கணக்கு என்று தெரிந்திருந்தும் ஏன் சம்மந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டது? என்பவற்றை புலன் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டிய கட்டாய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உண்மையான கணக்கை எழுதாமல் வேண்டுமென்றே அவ்வாறு செய்வது சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றம் என்று தெரிந்திருந்த பின்னும் தவிர்ப்பது குற்றம். மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் சொல்லப்பட்ட அரசு அதிகாரிகள் இக்குற்றங்களை செய்வது 7 வருடத்திற்கு மேலான குற்றச் செயல்கள் இவ்வழக்கில் உண்மையிலேயே நடந்துள்ளது.
• உண்மையை தொழில்நுட்ப ரீதியில் வெளிக்கொணர புலன் விசாரணையில் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐ.ஐ.டி சென்னை இயக்குநரின் உதவி நாடப்பட்டது. ஐ.ஐ.டி தொழில்நுட்ப குழு புதிதாக செய்யப்பட்ட 4 உலோக 221.08 கிலோ எடை தண்டாயுதபாணி திருமேனியை பழனி கோவில் நிர்வாக அலுவலர் மத்தியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
பொதுவாக 20 அல்லது 25 பரிசோதனை நடத்தப்படும். ஆனால் இவ்வழக்கில் புதிய திருமேனியின் 66 இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஐ.ஐ.டி டெக்னாலஜிக்கல் டெஸ்டிங் குழுவின் இந்த உலோகத் திருமேனியில் 10% சரியாகவோ அல்லது 10% சிறிது கம்மியாகவோ தங்க உலோகம் இருப்பதாக தனது தொழில்நுட்ப முடிவினை தெரிவித்துள்ளனர்.
அதன்படி 221.08 கிலோ புதிய தண்டாயுதபாணி திருமேனியில் 22 கிலோ அல்லது 21 கிலோவுக்கு சிறிது கம்மியான தங்க உலோகம் இருப்பது முதற்கட்ட புலன் விசாரணையில் ராசாராம் அவர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது அனுமதிக்கப்பட்ட 10 கிலோவிற்கு மேல் (ஆணையரின் ஆணைப்படி புதிய திருமேனி 10 கிலோ தங்கம் உள்ளடக்கிய 200 கிலோ ஐம்பொன் திருமேனியாக இருக்க வேண்டும்) 10 கிலோவிற்கு மாறாக சுமார் 22 கிலோ தங்கம் இருப்பது ஐ.ஐ.டி குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.
• இந்த மிகை எடையுள்ள 12 கிலோ தங்கம் எங்கிருந்து எவரால் எவ்வாறு யார் யாரிடமிருந்து யார் உத்தரவில் அல்லது உத்தரவில்லாமல் எந்தெந்த நேரக்கட்டத்தில் பெறப்பட்டது என்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்களால் கொடுக்கப்பட்டதா? வெளிமாநில தமிழர்களால் கொடுக்கப்பட்டதா? உண்மையிலேயே 21 கிலோ மட்டும்தான் பெறப்பட்டதா? அல்லது உண்மையிலேயே பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 150 கிலோவிற்கு மேல் தங்கம் கொடையாக அனுமதி பெறாத வெளிநபர்களிடமிருந்து பெறப்பட்டதா? என்று கண்டறிய வேண்டிய அவசியம் புலன்விசாரணைக்கு எழுந்துள்ளது.

• கைது செய்யப்பட்ட திரு.முத்தையா ஸ்தபதி ஏற்கனவே சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற எண்.727/17 (திருமேனி செய்ய பெறப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கம் கையாடல் சம்மந்தப்பட்ட வழக்கு) முதல் குற்றவாளியாவார். இதே குற்றவாளி காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் திருமேனியை இந்து சமய அறநிலையத்துறை உத்தரவுப்படி பரிசீலனை செய்து அத்திருமேனி 1300 வருடத்திற்கு முன் செய்யப்பட்ட தொன்மை திருமேனியென்றும் அதில் கிட்டத்தட்ட 75% தங்கம் இருப்பதாக தனக்கு தெரியவருகிறது என்றும் அத்திருமேனி தங்கம்போல இன்றும் மிளிர்கிறது என்றும் அத்திருமேனி ஒரிரு இடத்தில் சேதமடைந்துள்ளதாகவும் அதற்குப் பதிலாக புதிதாக ஒரு சோமஸ்கந்தர் திருமேனி செய்யலாம் என்றும் ஏற்கனவே 2009-ல் புதிதாக செய்யப்பட்ட மற்றொரு சோமஸ்கந்தர் சிலை ஆகம விதிப்படி அமையவில்லையென்றும் அதனை அகற்றிவிட்டு தன் அறிவுரைப்படி செய்யப்படும் புதிய சோமஸ்கந்தர் திருமேனியை உற்சவ விழாக்களில் பயன்படுத்தலாமென்றும் எழுத்துமூலமாக எழதி தனது கருத்துருவையும் முடிவையும் கொடுத்துள்ளார் என்பது அனைத்து புலன் விசாரணை அதிகாரிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
• காரணம் இவர் கல்லில் சிற்பம் செய்வதற்கு மட்டும் தகுதியும் அனுபவமும் உடையவர். உலோகத் திருமேனி செய்வதற்கு அதிகாரமோ சமூக அங்கீகாரமோ கிடையாது.
• ஆனால் பழனி தண்டாயுதபாணி புதிய திருமேனி செய்வதில் ஏ-1 குற்றவாளி திரு.முத்தையா ஸ்தபதி நேரடியாக ஈடுபட்டுள்ளார். புதிய திருமேனி கேளம்பாக்கத்தில் உள்ள இவரது பட்டறையில் செய்யப்பட்டுள்ளது. திருமேனி செய்ய பயன்படுத்தப்பட்ட உண்மையான ஸ்தபதியை குற்றவாளி ஏ-1 திரு. முத்தையா ஆட்டிப் படைத்துள்ளார் என்றும் தன்னுடைய ஒப்புதலுக்கு ஏற்றவாறு புதிய திருமேனியை செய்ய மற்ற ஸ்தபதிகளை உத்தரவு கொடுத்து ஆட்டிப் படைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
• திருமேனி செய்த பிறகு சட்டப்படி கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஆவணங்கள் இவ்வழக்கில் வேண்டுமென்றே தயாரிக்கப்படாமல் அவ்வாறு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என்று தெரிந்திருந்தும் திரு.முத்தையா ஸ்தபதியால் மறைக்கப்பட்டுள்ளது. திருமேனி செய்து முடித்த பிறகு சட்டப்படி கொடுக்கபடவேண்டிய ஆவணங்கள் ஏ-1 திரு. முத்தையா ஸ்தபதியால் உண்மையிலேயே கொடுக்கப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அன்று பதவியிலிருந்த குற்றவாளி .கே.கே.ராஜா மற்றும் முத்தையா ஸ்தபதி பட்டறையில் உலோக கலவை செய்யும்போது ஆஜரிலும் கண்காணிப்பிலும் இருந்த அதிகாரிகளாலும் எவ்வாறு அனுமதிக்கப்பட்டு புதிய திருமேனி ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டியுள்ளது.
• கற்பகிரகத்தில் 2004-ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய 4 உலோக 221.08 கிலோ தண்டாயுதபாணி புதிய திருமேனி அதே 2004-ம் வருடத்தில் ஒரு சில மாதங்களிலேயே கற்பகிரகத்திலிருந்து அகற்றப்பட்டு தனி அறையில் 14 வருடகாலமாக சிறைக்கைதி போல எந்தவித காலபூசையும் இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஐ.ஐ.டி குழுவின் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
• 6 மாதங்களிலேயே புதிய திருமேனி கற்பகிரகத்தில் அகற்றப்பட்டு விட்டது. காரணம் புதிய திருமேனி ஒரிரு வாரங்களிலேயே கருநிறம் படிந்து திருமேனியுடைய முக்கால் பாகத்தில் கருப்பு படிமம் படிந்து அடியார்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் சொல்வண்ணா மன வருத்தத்தையும் ஆதங்கத்தையும் உணர்வுபூர்வ தீரா மன உளைச்சலையும் கொடுத்தது என்றும் அதன் விளைவாக அகற்றப்பட்டது என்றும் புலன் விசாரணையில் தெரியவருகிறது.
• ஆக மொத்தத்தில் புதிய தண்டாயுதபாணி திருமேனியை செய்ய கோவில் நிர்வாக நிதியிலிருந்து 2004-ம் வருடத்தில் ஏ-2 திரு.கே.கே.ராஜா சுமார் ரூ.6065000ஃ- செலவிடப்பட்டிருப்பது புலனாகியுள்ளது. ரூ.60 இலட்சம் 10 கிலோ தங்கத்திற்காக பழனி கோவில் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டள்ளது. மீதமுள்ள ரூ.65000ஃ-ம் கோவில் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
• புதிய திருமேனி செய்வதற்கான முதன்மை நோக்கமானது அதனை தொடர்ந்து கருவறையில் வைத்து பிரதிஷ்டை செய்து அதற்கே அனைத்து அபிஷேகங்களையும் செய்து காலப்போக்கில் கோடானுகோடி அடியவர்கள் அனைவரும் அதனையே நவபாசான மூலவர் திருமேனியென்று மனதளவில் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதே ஆகும்.
• ஆனால் இந்த நோக்கம் 6 மாதத்திலேயே நிறைவேறவி;ல்லை. அதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.6065000/- மற்றும் அதற்கான 14 வருட வங்கி வட்டியான ரூ.7056000/- சேர்த்து கிட்டத்தட்ட ரூ.1.31 கோடி அளவிற்கு ஒட்டுமொத்த நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் புலனாகியுள்ளது.
• இந்த ரூ.1.31 கோடி நட்டம் நேரடியாக பழனி மலைக்கோவில் தேவஸ்தானத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த புதிய சிலை செய்யும் நடவடிக்கையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்ட அனைவருமே ஆவார். அவர்கள் யார் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் புலன் விசாரணைக்கு எழுந்துள்ளது.

• ஏகாம்பரநாதர் கோவில் 1300 வருட தொண்மையான சோமஸ்கந்தர் திருமேனியில் 75மூ தங்கம் இருப்பதாக சொன்ன ஸ்தபதி தற்சமயம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதே திரு.முத்தையா ஸ்தபதி ஆவார். சோமஸ்கந்தர் திருமேனியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனையில் தங்கம் ஒரு கிராமிற்கு கீழே உள்ளதாக கண்டறியப்பட்டது.
• இருப்பினும் அது 1000 வருடத்திற்கும் மேலாக இன்றும் எள்ளவுகூட கருமையடையவில்லை. ஆனால் அதே ஏ-1 திரு.முத்தையா ஸ்தபதிதான் பழனி புதிய 221.08கிலோ தண்டாயுதபாணி திருமேனியை தன்னுடைய நேரடிப்பார்வையில் செய்தவர். செய்த வருடம் 2004. ஆனால் இப்புதிய திருமேனியில் ஒரு கிராமிற்கு கிழே தங்கம் போடப்படவில்லை.
• தொழில்நுட்ப ரீதியில் கிட்டத்தட்ட 22 கிலோ தங்கம் உள்ளது. அவ்வாறிருக்கையில் இப்புதிய திருமேனி எவ்வளவு மிளிரவேண்டும். ஆனால் ஓரிரு வாரம் அல்லது மாதங்களிலேயே புதிய திருமேனியின் முக்கால்வாசி பாகங்கள் கருமையடந்துள்ளது இந்த ஏ-1 திரு. முத்தையா ஸ்தபதி உண்மையிலேயே அனுபவமிக்க ஸ்தபதிதானா? என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.
• புதிய திருமேனி செய்ய மொத்தம் 263 கிலோ 4 உலோகங்கள் ஏ-1 திரு.முத்தையா ஸ்தபதியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய சிலை செய்யும் இடத்தில் நேரடியாக கண்காணிக்க கிட்டத்தட்ட பல அதிகாரிகள் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.
• பயன்படுத்தப்பட்ட மொத்த உலோகத்தின் எடை 263 கிலோ. புதிய திருமேனியின் எடை 221.08 கிலோ. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் 42 கிலோ (263 – 221 = 42). இந்த 42 கிலோ புதிய திருமேனி செய்த பிறகு கிடைக்கப்பெற்ற மீத உலோகம். இந்த 42 கிலோ மீத உலோகம் தங்க உலோகத்தையும் உள்ளடக்கியது.
• தொழில்நுட்ப பரிசோதனைப்படி புதிய திருமேனி 10மூ அல்லது 10மூ சிறிது கம்மியான தங்க உலோகத்தை கொண்டுள்ளது.
• 42 கிலோ மீத உலோகத்திலும் 10மூ அல்லது 10மூக்கும் சிறிது குறைவான தங்கத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். அதாவது 4.2 கிலோ தங்கத்தை உள்ளடக்கியது.
• இந்த 4.2 கிலோ தங்கத்தை உள்ளடக்கிய 42 கிலோ மீத உலோகத்தின் 2004-வருட மதிப்பு கிட்டத்தட்ட ரூ.24 இலட்சம். இந்த 24 இலட்சம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்குச் சொந்தமானது. ஆகவே பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிதி கணக்கிற்கு இந்த ரூ.24 இலட்சம் திருப்பி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செலுத்தப்படாமல் கிட்டத்தட்ட 14 வருட காலமாக கையாடல் செய்யப்பட்டு மறைக்கப்பட்ட குற்றங்கள் புலன்விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இக்குற்றங்களை செய்தவர்கள் யார் யார்? அவர்கள் தற்போது எங்குள்ளனர்? ரூ.24 இலட்சத்திற்கு 14 வருட வங்கி வட்டி எவ்வளவு? அந்த நட்டத்தை பழனி மலைக்கோவிலுக்கு திருப்பி ஈடு செய்யப்பட்டுள்ளதா? அல்லது மறைக்கப்பட்டு இருளில் உள்ளதா? கடுமையான முழு புலன் விசாரணை செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
• இந்த மிகப்பெரிய கையாடலை அப்போதிருந்த அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு சட்டப்படி ஜென்ம தண்டனைக்குரிய குற்றச்செயலான நம்பிக்கை மோசடி குற்றச்செயலை தங்களுடைய கூட்டுச்சதியின் மூலம் கெட்டிக்காரத்தனமாக செய்து முடித்த பிறகும் 2004 வருடத்திற்கு பின் பொறுப்பு வகித்த அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி காவல்துறையில் தொடர்ந்து 14 வருடங்களாக தெரிவிக்காமல் இருக்கவேண்டிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து இந்த மிகப்பெரிய குற்றச் செயல்கள் வெளிச்சத்திற்கு எள்ளளவுகூட வராமல் தடுத்து கூட்டுச்சதி செய்துள்ளனர்.
• 2004-லிருந்து அலுவலராக பொறுப்பிலிருந்த அனைத்து அதிகாரிகளும் இவைகள் கைது செய்யக்கூடிய பெருங்குற்றங்கள் என்று தங்களுக்குத் தெரிந்திருந்தும் அவ்வாறு மறைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து மறைத்து மூடி இப்பெரும் குற்றச்செயல்களை சம்மந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரிவிக்காமல் 14 வருடகாலமாக இருளில் இருக்க வைத்துள்ளனர்.
• இவ்வழக்கில் முதற்கட்ட விசாரணையை ஐ.ஜி.பி திரு.ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்கள் நடத்தியுள்ளார்.

• புலன் விசாரணையை டி.எஸ்.பி திரு.கருணாகரன் அவர்களிடம் ஐ.ஜி.பி ஒப்படைத்து நேரடியாக புலன் விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். கெட்டிக்காரத்தனமாக இரகசியமாக 14 வருடங்களுக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட இப்பெருங்குற்றங்களையும் பெரிய சமூக அந்தஸ்துடைய மற்றும் பெரிய அதிகாரிகள் மற்ற பெரிய குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட புலன் விசாரணை குழு படிப்படியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள்.
• கோவிலில் 2004ல் மற்றும் அதற்கு முன்னால் பணியிலிருந்த ஸ்தானிகர் குழுக்களும் நவபாசான மூலவர் திருமேனி சேதமடைந்திருக்கிறது. அதனால் அதற்குப்பதிலாக புதிய உற்சவர் திருமேனி செய்யப்பட வேண்டும் என்று ஒருபோதும் தாங்கள் நிர்வாகத்திற்கு எழுதிக்கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
• இந்திய தொன்மைச்சட்டம் தொன்மையான சிலைகளை பேணி பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறதே ஒழிய அதனை அகற்றிவிட்டு அல்லது அதற்கு பதிலாக புதிய சிலையை ஒரு “யுவெஙைரந” கோவிலில் புகுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. 1959ன் சட்டத்திலும் புதிய திருமேனிகளை கோவிலில் புகுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
• மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த தொன்மையான கோவிலிலும் சேதாரம் என்ற போர்வையில் புதிய திருமேனியை வசதி படைத்தவர் ஒருவரோ அல்லது பலரோ கொடையாக செய்து கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரி முயற்சித்தால் அதனை உடனடியாக சந்தேகப்பட வேண்டும் அதை உடனடியாக ஒன்றுகூடி தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் நாட்டின் கலாச்சார பொக்கிஷங்களை தலையை அடமானம் வைத்து காப்பாற்றுவோம் என்று ஒருங்கிணைந்து நிற்கும் அனைவருக்கும் தற்போது எழுந்துள்ளது. இல்லையெனில் இன்னும் 50 வருட காலங்களில் நமது ஒரு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரத்திற்கு மேல் உள்ள தொண்மை தெய்வ திருமேனிகள் நமது திருக்கோவில்களில் இருக்காது. வெளிநாட்டில் உள்ள பிற நாகரீக கலைக்கூடங்களில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு நம்மை நமது ஆயிரங்காலத்திற்கும் முந்திய கலாச்சார பொக்கிஷங்களிலிருந்து பிரித்து“நமக்குள் நாம் அந்நியராகி விடுவோம்” என்பது திண்ணம்.
• நம் தமிழ்நாட்டின் வரலாறு நம் தாய்மொழி எழுதி வெளியிடப் பெற்றால் நம் தமிழ்மக்கள் அஃதினை ஆர்வமுடன் படித்து உணர்ச்சியும் ஊக்கமும் பெற்று நமது நாட்டின் வளர்ச்சிக்கான துறைகளில் சிறப்புறுவர் என்பது உறுதி.
• பண்டைய தமிழ் மன்னர்கள் கட்டிய திருக்கோவில்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கல்வெட்டு;க்கள் திருப்பணி என்ற பெயரில் வண்ணம் பூசி படிப்படியாக மீட்க முடியாத அளவிற்கு அழிக்கப்பட்டு விட்டன. அம்மன்னர்கள் வழங்கிய கொடைத்திறனை கூறும் செப்பேடுகளும் அவர் தம் ஆட்சியில் வழங்கிய நாணயங்களும் அப்பேரரசர்களின் பேராதரவினால் வெளிவந்துள்ள பழந்தமிழ் நூல்களும் நம்மை விட்டு வேண்டுமென்றே அகற்றப்பட்டு தொலைதொடர்பில் உள்ள அயல்நாட்டிற்கு இன்னும் 10 20 வருடங்களில் சொந்தமாகிவிடும். ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று விசாரித்த அடியார்கள் ஒட்டுமொத்த குரலில் சொல்லுகின்றனர்.
• கைது செய்யப்பட்ட குற்றவாளி கூடுதல் முதன்மை நீதிமன்ற நடுவர் கும்பகோணம் முன் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



