
சூர்யாவுடன் ‘அயன்’ என்ற படத்தில் நடித்தவர் நடிகர் ஜெகன். இவர் சூர்யாவுக்கு நெருக்கமானவரும் கூட. இவர் வான்மதி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் வான்மதியின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுத்தார்
ஆனால் இதனை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, ஓடிப்போய் திருமணம் செய்வதை தடுத்து நிறுத்தியதோடு, தன்னுடைய தந்தையும் நடிகருமான சிவகுமாரை வான்மதியின் பெற்றோரிடம் பேச வைத்து திருமணத்திற்கு சம்மதம் பெற்று தந்தார். இந்த தகவலை ஜெகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா குடும்பத்தினர் இல்லை என்றால் எனது திருமணமே நடந்திருக்காது, அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என்று ஜெகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்
ஜெகன், வான்மதி, திருமணம், சூர்யா, சிவகுமார்
Actor Jagan reveals Suriya’s role in his love marriage



