ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்கிய ‘மெர்க்குரி’ என்ற படத்தை வரும் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம், ஸ்டிரைக் முடியும் வரை இந்த படத்தின் தமிழ் வெர்ஷனை வெளியிடுவதில்லை என்று கூறியுள்ளார்.
இதில் என்ன கூத்து என்றால் ‘மெர்க்குரி’ திரைப்படம், கமல்ஹாசனின் ‘பேசும் படம்’ போல வசனமே இல்லாத மெளன படம். இந்த படத்தில் டைட்டில் மட்டுமே மொழிக்கு மொழி மாற்றப்படும். மற்றபடி முழுக்க முழுக்க வசனமே இல்லாத ஒரு படத்தின் தமிழ் வெர்ஷனை மட்டும் வெளியிடவில்லை, மற்ற மொழி வெர்ஷனை வெளியிடுவதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளது ஒரு பெரிய ஏமாற்றுவேலை என தயாரிப்பாளர்கள் கொந்தளித்துள்ளனர். வரும் 13ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.