இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ‘வில்லு’ படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு பிரபுதேவா மீது காதல் ஏற்பட்டது. இதற்காக அவர் இந்து மதத்திற்கு மாறியதாகவும், பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிந்தது. மீண்டும் சினிமாவில் பிசியான நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பிரபுதேவா, அஜித் படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படூகிறது. சிம்புவுடன் ஏற்பட்ட காதல் முறிந்த பின்னர் நயன்தாரா, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்தது போல் பிரபுதேவாவின் இயக்கத்திலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது