விஜய் நடித்த மெர்சல், அஜித் நடித்த ‘விவேகம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை என்பதால் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்
இந்த நிலையில் நேற்று காஜல் அகர்வால் தனது குடும்பத்தினர்களுடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். ஆனால் கோவில் அருகே காஜல் அகர்வாலை பார்த்த அவரது ரசிகர்கள் முண்டியடித்து அவரிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் சூழ்ந்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசர் உடனடியாக ரசிகர்களிடம் இருந்து காஜல் அகர்வாலையும் அவரது குடும்பத்தினர்களையும் காப்பாற்றி கோவிலின் உள்ளே பாதுகாப்பாக அழைத்து சென்ற்னர். ‘மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த காஜல் அகர்வாலுக்கு ரசிகர்களால் சோதனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது



