பிரபல நடிகையும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியுமான நக்மா தற்போது புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள சோரப்பட்டு என்ற கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நக்மா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசி முடித்தவுடன் அவரை ஒரு பாட்டு பாடும்படி அங்குள்ள பெண்கள் கேட்டுக்கொண்டனர்.
தனக்கு தெரிந்த அரைகுரை தமிழில் அவர் ரஜினியின் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற
அழகு… அழகு..
நீ நடந்தால் நடையழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு…
நீ பேசும் தமிழ் அழகு…
நீ ஒருவன் தானழகு… என்ற பாடலை பாடினார்.
இந்த பாடலை அவர் பாடி முடித்தவுடன் மேடையில் இருந்தவர்களும், பொதுமக்கள் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று கோஷமிட்டனர். உடனே சுதாரித்த நக்மா, நான் இந்த பாடலில் அழகு என்று கூறியது ராகுல்காந்தியை, ரஜினிகாந்தை அல்ல என்று கூறினார். மேலும் இன்றைய நிலைமையில் பாட்ஷா ராகுல்காந்திதான், அவரைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.