பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபகாலமாக பல முக்கிய பிரமுகர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி வருகிறார். அவருடைய குற்றச்சாட்டுக்கு பாகுபலி புகழ் ராணாவின் சகோதரரும் தப்பவில்லை
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பவன்கல்யாண் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதோடு, அவரை அண்ணன் என்று கூப்பிட்டதற்கு வருந்துவதாக கூறி தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டார்
இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் போராட்டம் நடத்திய நடிகை மாதவி லதா கைது செய்யப்பட்டார். சிறை அனுபவம் புதுமையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது