
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு அழைப்பு விடுத்த ஆடியோ பதிவில் ஆளுநர் பெயரையும் குறிப்பிட்டதை அடுத்து, தமிழக ஆளுநர் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.
ஆளுநர் விளக்கம் அளிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப் பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தைத் தட்டியது சர்ச்சையான நிலையில், ஆளுநர் மீது பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில் அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.



