ரம்ஜான் விடுமுறையை குறிவைக்கும் ‘காலா’

சினி நியூஸ் சினிமா

kaala - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக காலாவுக்கு முன் சென்சார் ஆன திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் கேட்டு கொண்டதற்கு இணங்க காலா ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ‘காலா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் காலா திரைப்படம் ரம்ஜான் விடுமுறை தினமான ஜூன் 15ஆம் தேதி ரிலீசாக வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

பா,ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பா நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.