‘காலா’ பார்த்த ஆர்வக்கோளாறில் ரசிகர் செய்த செயல்… திரையுலகினர் கடும் அதிர்ச்சி!

Published:

kaala relea - 2026நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்றே சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியானது. தமிழகத்தில் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

உலகெங்கிலும் வெளியான காலா படம் குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர், திரையரங்கத்தில் இருந்தபடி, காலா படத்தை லைவ் ஷோவாக 45 நிமிடங்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பேஸ்புக் மூலம் சமூக ஊடகவாசி ஒருவர் இவ்வாறு செய்த செயல் குறித்து உடனடியாக அந்நாட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் போலீசார் பிரவீனை கைது செய்தனர். காலா படத்தின் முதல் ஷோ தியேட்டரில் வெளியாகும் முன்னரே, அதனை இணையத்தில் வெளியிடுவோம் என்று, புதிய படங்களை இணையதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதனால், சிங்கப்பூரில் பேஸ்புக் மூலம் காலா படத்தை லைவ் ஒளிபரப்பு செய்த சமூக ஊடகவாசி பிரவீனுக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காலாவை பேஸ்புக்கில் லைவ்வாகக் காட்டியது, திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img