சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த படம் ஏப்ரல் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தவுடன் ரஜினிகாந்த் ரசிகர்கள் குஷியாகி, கொண்டாடி வருகின்றன. நேற்றிரவு முதல் டுவிட்டரில் ‘காலா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிரெண்டில் உள்ளது.
தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Happy to announce that Superstar’s #kaala will release on June 7th in all languages worldwide. #makewayfortheking #thalaivar pic.twitter.com/xJC6PjsNxR
— Dhanush (@dhanushkraja) April 20, 2018