அஜித் பிறந்த நாளில் வெளிவரும் காலா

சினி நியூஸ் சினிமா

kaala single song - 2026நாளை மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமும் கொண்டாடவுள்ளது. இந்த தினத்தில் பல படங்களில் பர்ஸ்ட்லுக், டிரைலர் உள்பட பல வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

செம வெயிட்டு’ என்று தொடங்கும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் வித்தியாசமாக கம்போஸ் செய்திருப்பதாகவும், இந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

மேலும் இந்த படத்தின் மற்ற பாடல்கள் வரும் மே 9ஆம் தேதியும், இந்த படம் வரும் ஜூன் 7ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.