December 5, 2025, 9:21 PM
26.6 C
Chennai

இரவுக்கு ஆயிரம் கண்கள் – பிரகாசம் …

iravukku aayiram kangal - 2025

இரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி  தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையும் அவர்  முயற்சி வீண்போகவில்லை . ஒரு இரவு , ஒரு சம்பவம் , நான்கு பேர் இப்படி கதை முடிச்சுள்ள படங்களை நிறைய பார்த்திருப்போம் . சமீபத்திய உதாரணம் விழித்திரு . அந்த படம் போல நம்மை தூங்க வைக்காமல் இரவு முழுக்க விழிக்க வைத்த  இயக்குனர் மு.மாறனுக்கு பாராட்டுக்கள் …

கால் டாக்ஸீ டிரைவர் பரத் ( அருள்நிதி ) தனது காதலி சுசீலா ( மஹிமா ) வுக்கு தொல்லை கொடுக்கும் கணேஷ் ( அஜ்மல் ) வீட்டுக்கு இரவில் போகிறார் . அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது , ஏற்கனவே சிலர் கணேஷை கொலை செய்யும் நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார்கள் . பரத்தை ஏன் போலீஸ் துரத்துகிறது ? உண்மையான கொலையாளி யார் ? கணேஷை ஏன் கொலை செய்ய அலைகிறார்கள் . இந்த அத்தனை கேள்விகளுக்கும் அங்கங்கே க்ளூ வைத்து அழகாக தெளிவாக ( எக்கச்சக்க கேரக்டர்கள் கொஞ்சம் குழப்பினாலும் )  சொல்வதே இ.ஆ.க . ஒரே கண்டிஷன் ஒரு சீனையும் தவற விடக்கூடாது …

அருள்நிதி வழக்கம் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியாக நடித்திருக்கிறார் . எந்த இடத்திலும் ஹீரோயிசத்தை தலை தூக்க விடாமல் திரைக்கதையில் பயணித்திருப்பது அவரை மெச்சூரிட்டியை காட்டுகிறது . அவரது பயணம் இதே போல தொடர வாழ்த்துக்கள்  . மஹிமா சைனீஸ் மாமோ போல நன்றாக இருக்கிறார் . பதட்டப்படும் போது கண்கள் நன்றாக பேசுகிறது . அஜ்மல் கேரக்டர் திருட்டு பயலே பிரசன்னா வை நினைவு படுத்தினாலும் நல்ல தேர்வு . மெய்ன் கேரக்டர்களை தொடர்ந்து நம்மை அதிகம் கவர்பவர் ஆனந்தராஜ் …

ஆடுகளம் முருகதாஸை வீணடித்திருக்கிறார்கள் . சாயா சிங் கேரக்டர் படத்தை நகர்த்துவதற்கு உதவியிருந்தாலும் இவருக்கும் ஜான் விஜய் கேரக்டருக்கும் சிங்க் ஆகவில்லை . காதலித்த பெண்ணை கை பிடிக்காததால் சாயா வை தொடாமல் இருக்கும் விஜய் வேறொரு பெண்ணோடு ஏன் போக வேண்டும் ? பணக்காரியாக இருக்கும் சாயா சிங் விஜய் செய்யும் டார்ச்சர்களை ஏன் ஐந்து வருடங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் போன்ற கேள்விகள் எழாமல்  இல்லை …

சம்பவங்கள் பெரும்பாலும் இரவில் நடந்தாலும் நம்மை விழித்துக்கொண்டே வைத்திருக்கும் திரைக்கதை  அருமை . ஒரு சில கேரக்டர்கள் வீண் போல தோன்றினாலும் கேரக்டர்களின் வாயிலாகவே சின்ன சின்ன பிளாஷ்பேக்கில் கதையை நகர்த்திய விதம் சிறப்பு . கமர்ஷியலுக்காக  பாட்டு , லவ் , செண்டிமெண்ட் என்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே ட்ராக்கில் பயணித்திருப்பது மிகச்சிறப்பு . சாம்.சி.எஸ் சின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பெப்பை கொடுக்கிறது …

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் போலீஸ் அதன் பிறகு க்ளைமேக்ஷில் வந்து பழைய படம் போல யார் கொலையாளி என சொல்லி முடித்து வைப்பது சறுக்கல் . அவர்களின் விசாரணையை ஒரு வேலை படத்தின் நேரத்தை நினைத்து தவிர்த்திருக்கலாம் . இது போன்ற மிஸ்டரி படங்களில் க்ளைமேக்ஸ் மிகவும் முக்கியம் . ஹைப் கொடுத்து கடைசியில் சொதப்பி விடுவார்கள் . இதில் அது போலல்லாமல் இண்டெர்வெல் , கிளைமேக்ஸ் இரண்டையும் கட்சிதமாக முடித்திருக்கிறார்கள் . க்ரைம் நாவல் பிரியர்களுக்கு படம் பிரசாதம் . மொத்தத்தில் விறு விறு திரைக்கதையோடு வந்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் பிரகாசம் …

ரேட்டிங்க்            : 3.25 * / 5 *

ஸ்கோர்  கார்ட் : 43 

– விமர்சனம் : அனந்த நாராயணன் (வாங்க ப்ளாக்கலாம் அனந்து)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories