கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

சினி நியூஸ் சினிமா

kadaikutti 1 - 2026 கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கார்த்தியும் ஒருவர். இவர் நடித்த ‘காற்று வெளியிடை’ தோல்வி அடைந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி இவருடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கிராமத்து கதையம்சம் உள்ள திரைப்படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் மிகப்பெரிய தொகை ஒன்றை கொடுத்து பெற்றுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

kadaikutti2 - 2026மேலும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் ரிலீஸ் உரிமையை கைப்பற்ற இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்திக்கு முதல்முறையாக சாயிஷா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.