மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபில் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.



