மே 17ல் ரிலீஸ் ஆகிறது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

மே 17ல் ரிலீஸ் ஆகிறது 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு பத்திரிகையாளர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தாலும் திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மே 11ல் இருந்து தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் இந்த படத்தில் நடித்திருந்த நாயகன் அரவிந்தசாமி, மற்றும் நாயகி அமலாபால் ஆகியோர் தங்கள் டுவிட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் மே மாதம் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 18ஆம் தேதி விஜய் ஆண்டனியின் காளி மற்றும் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது இந்த படமும் அதே தேதியில் இணைந்துள்ளது.

சித்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் அரவிந்தசாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.