இளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் ‘தளபதி 62’ என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வரவுள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் முதல்முறையாக சமூக வலைத்தளங்களுக்கு முன்பாக சன் டிவியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்முருகதாஸ் இயகக்த்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.