நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல் ஹாசன் நடிப்பில் தற்போது புதியதாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதற்காக அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
ஒரு புறம் அரசியல் மறுபுறம் சினிமா என பிஸியாகவே இருக்கும் கமல் ஹாசனுக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்தும் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொச்சியில் அளித்துள்ள ஒரு பேட்டியில்: 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆனால் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும். என்று அவர் தொிவித்துள்ளாா்.