தமிழில் நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் நடித்த நாயகையரை முதன்மையாக கொண்ட படங்கள் வந்தன. அவர்களில் நயன்தாரா கொஞ்சம் பெரிய வெற்றியையும், ஜோதிகா கொஞ்சம் சுமாரான வெற்றியையும் அவர்களது சில படங்கள் மூலம் பெற்றார்கள். ஆனால், த்ரிஷா, சமந்தா நடித்த படங்கள் தோல்வியடைந்தன.சமந்தா தெலுங்கில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘ஓ பேபி’ படம் கடந்த ஜுலை 5ம் தேதி வெளியானது.
‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். சமந்தாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் படம் வியாபார ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரையில் இப்படம் 38 கோடியை வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 27 கோடியும், அமெரிக்காவில் 7 கோடியும் வசூலித்துள்ளதாம். தனி நாயகியர் படங்களில் நயன்தாரா, ஜோதிகா செய்யாத வசூல் சாதனையை இதன் மூலம் சமந்தா செய்துள்ளாராம்.