வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு – கங்கை கொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் ஜூலை 23ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வண்டி எண்.16191 தாம்பரம் – நாகர்கோயில் அந்த்யோதயா விரைவு ரயில் ஜூலை 23ம் தேதி கோவில்பட்டி மற்றும் நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்.16192 நாகர்கோயில் – தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில், ஜூலை 23ம் தேதி நாகர்கோயில் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்.22627திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், ஜூலை 23ம் தேதி வாஞ்சி மணியாச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்.22628 திருவனந்தபுரம் – திருச்சிராப்பள்ளி அதிவிரைவு ரயில், ஜூலை 23ம் தேதி திருவனந்தபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்.56768திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் ஜூலை 23ம் தேதி, கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் கால தாமதமாக சென்றடையும்.
முன்னதாக, மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை மாதத்தில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முன்னர் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில்…
வண்டி எண் 76830 காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் திங்கட்கிழமைகள் தவிர 02.7.2019 முதல் 28.7.2019 வரை காரைக்குடியிலிருந்து 06.50 மணிக்கு பதிலாக 06.20 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 76807 திருச்சிராப்பள்ளி – மானாமதுரை பயணிகள் ரயில் ஜூலை 2, 5, 9 முதல் 12, 16 முதல் 19 மற்றும் 23 முதல் 26 ஆகிய நாட்களில் காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10.55 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 76807 திருச்சிராப்பள்ளி – மானாமதுரை பயணிகள் ரயில் ஜூலை மாதம் 6, 7, 13, 14, 20, 21, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் இயக்கப்பட மாட்டாது.
வண்டி எண் 76840 காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ஜூலை மாதம் 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் காலை 09.40 மணிக்கு பதிலாக நண்பகல் 12.00 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56723/ 56723 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் ஜூலை மாதம் 22 முதல் 27 வரை மற்றும் 28 முதல் 31 வரை மண்டபம் – ராமேஸ்வரம் அவர்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56319/ 56320 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 02.7.2019 முதல் 31.7.2019 வரை வியாழக்கிழமைகள் தவிர திண்டுக்கல் -விருதுநகர் ரயில் நிலைகளுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்56769/ 56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் ஜூலை மாதம் 3,4, 6 முதல் 8 வரை, 10, 11, 13 முதல் 15 வரை, 17, 18, 20 முதல் 22 வரை, 24, 25, 27 முதல் 29 வரை மற்றும் 31 ஆகிய நாட்களில் திருநெல்வேலி – திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் மதுரையிலிருந்து ஜூலை மாதம் 2, 5, 9, 12, 16, 19, 23, 26 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாலை 04.05 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16127 சென்னை – குருவாயூர் விரைவு ரயில் 02.7.2019 முதல் 31.7.2019 வரை வியாழக்கிழமைகளில் தவிர 80 நிமிடங்கள் அதன் இணைப்பு ரயில் வண்டி எண் 16129 சென்னை – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு 80 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.
வண்டி எண் 56624 மதுரை – பழனி பயணிகள் ரயில் 02.7.2019 முதல் 31.7.2019 வரை மதுரையிலிருந்து காலை 07.45 மணிக்கு பதிலாக காலை 07.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56826 திருநெல்வேலி – ஈரோடு பயணிகள் ரயில் ஜூலை மாதம் 2 முதல் 9 வரை, 11 முதல் 14 வரை 16,17, 19, 21, 22, 24 முதல் 27 வரை மற்றும் 30, 31 ஆகிய நாட்களில் 120 நிமிடங்கள் காலதாமதமாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
வண்டி எண் 56822/ 56821 திருநெல்வேலி- மயிலாடுதுறை – திருநெல்வேலி இணைப்பு ரயில் ஜூலை மாதம் 2 முதல் 9 வரை, 11 முதல் 14 வரை,16,17, 19, 21, 22, 24 முதல் 27 வரை மற்றும் 30, 31 ஆகிய நாட்களில் திண்டுக்கல் திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் செங்கோட்டை மதுரை பயணிகள் ரயில் ஜூலை மாதம் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் மதுரைக்கு 60 நிமிடங்கள் கால தாமதமாக வந்து சேரும்.
வண்டி எண் 56735 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் விருதுநகர் – மதுரை இடையே 13.07.2019 முதல் 31.07.2019 வரை (வியாழக்கிழமை நீங்கலாக) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.